ஒரு தலைவன் இருக்கிறான்: கனடா பிரதமரை பாராட்டிய சீக்கியர்
India
Canada
World
By Dilakshan
காலிஸ்தான் படுகொலை விவகாரம் தொடர்பில் குரல் எழுப்ப ஒரு தலைவன் இருக்கிறான் என்ற எண்ணம் கனேடிய சீக்கிய மக்களிடம் உருவாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
தங்கள் சார்பில் இந்தியாவை எதிர்த்து நின்றமைக்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சீக்கியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சீக்கியர்களின் இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்காக குரல் கொடுத்தமைக்காக அவர்கள் கனேடிய பிரதமருக்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
பின்னடைவு
மேலும், கனடா இந்தியா போன்ற நாட்டிற்கு எதிராக குரல் கொடுக்கும் போது கடும் பின்னடைவு ஏற்படலாம், என்ற போதும் அவற்றை எதிர்கொள்ள பிரதமர் ட்ரூடோ துணிந்தார் எனவும் கனேடிய சீக்கியர்கள் பாராட்டியுள்ளனர்.
கனடாவில் சுமார் 770,000 சீக்கியர்கள் குடியிருக்கின்றனர். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திற்கு வெளியே, இந்த எண்ணிக்கை என்பது மிக அதிகமாகும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்