JVP மற்றும் NPP எம்.பிக்களின் சம்பளம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்
ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வேதனத்தை கட்சி நிதிக்கே வழங்குகிறார்கள் என்பது நாட்டு மக்கள் அறிந்த உண்மை எனவும், இதுவே தமது அரசியல் இயக்கத்தின் கலாசாரம் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) நாடாளுமன்றத்தில் இன்று (19) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எமது வங்கிக் கணக்குகளின் வெளிப்படைத்தன்மையை நாட்டுக்குக் காட்ட வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
ஜே.வி.பி உறுப்பினர்கள்
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளும் தங்கள் கட்சி நிதிகள் தொடர்பாக இவ்வாறு செயற்பட வேண்டும் என நான் முன்மொழிகிறேன்.

ஜே.வி.பி உறுப்பினர்கள் நீண்ட காலமாகத் தமது வேதனத்தை கட்சி நிதிக்கே அனுப்பி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தியும் அதே கலாசாரத்தையே பின்பற்றுகிறது. தனிப்பட்ட ரீதியில் எவரும் எதனையும் பெற்றுக்கொள்வதில்லை.
எமது 159 உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். அனைவரினதும் வாழ்க்கைக் கதைகளை இங்கே கூற முடியாது, ஆனால் நாங்கள் எப்படியோ வாழ்கிறோம். ஒரு அரசியல் இயக்கமாக நாங்கள் முன்மாதிரியாகச் செயற்படுகிறோம்.
இதேவேளை பிரதமரின் கருத்துக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, "பொய் சொல்வதே ஜே.வி.பியின் கலாசாரம்" என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |