பயங்கரவாத தடைச்சட்டத்தாலேயே ஜே.பி தலைவர் கூட படுகொலை :சுட்டிக்காட்டிய தமிழ் எம்.பி
பாரதூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தாலேயே ஜே.வி.பி தலைவர் கூட கொல்லப்பட்டார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(06) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அநுர அரசாங்கம் அளித்த உறுதிமொழி
“பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் எனவும், அதற்கு பதிலாக மாற்று சட்டம் கொண்டுவரப்படமாட்டாது எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது உறுதியளித்திருந்தது.
நிலைமை இவ்வாறிருக்க ஒரு வருடம் ஆகியும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. எனவே, விரைவில் அது முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக மாற்று சட்டமும் கொண்டுவரப்படக்கூடாது.
நாட்டில் பாரதூரமான நிலை ஏற்பட்டது
இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தால்தான் நாட்டில் பாரதூரமான நிலை ஏற்பட்டது.கடந்தகால அரசுகளால் பயங்கரவாத தடைச்சட்டம் தவறாகவே பயன்படுத்தப்பட்டது.” – எனவும் கவீந்திரன் கோடீஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 18 மணி நேரம் முன்
