அதிகரித்த வாழ்க்கைச் செலவு - வீதிக்கு இறங்கவுள்ள மக்கள்
people
protest
Increased cost of living
By Jaso
நாட்டில் வாழ்க்கைச் செலவுகள் தாங்க முடியாத அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளதால், திங்கட்கிழமை முதல் மக்கள் வீதிக்கு இறங்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அரசியல் பீட உறுப்பினர் கே.டி.லால்காந்த(KD Lalkantha) தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே தமது நோக்கம் என்றும், தேசிய தொழிற்சங்க மையம் அதன் பொறுப்பை ஏற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தற்போது உர மற்றும் எரிவாயு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களுடன் கூட்டு போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இதன்படி, திங்கட்கிழமை முதல் அரச, அரை அரச, தனியார் மற்றும் தோட்டத் துறைகள் அனைத்தும் வீதிக்கு இறங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.