கொழும்பின் மிக முக்கிய பகுதிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய திட்டம்!
ஐக்கிய மக்கள் சக்தி இலங்கை அரசாங்கத்திற்கு மட்டுமே எதிரானவர்கள் சீனாவிற்கு எதிரானவர்கள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நாங்கள் சில நாடுகளிற்கு எதிரானவர்கள் என சிலர் கருதுகின்றனர் என தெரிவித்துள்ள அவர், நாங்கள் சீனாவிற்கோ அமெரிக்கா இந்தியாவிற்கோ எதிரானவர்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மக்களிற்கு துரோகம் செய்வதால் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் என கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவர்களிற்கு விற்பதற்காக அமைச்சரவை அனுமதியுடன் செலென்டிவா இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நிறுவனத்தின் மூலம் கொழும்பில் பல சொத்துக்களை விற்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் கிரான்ஹயட் ஹோட்டல் கபூர் கட்டிடம், ஹில்டன் ஹோட்டல் ஆகியவற்றை விற்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.