பேருந்து மோதியதில் நபர் பலி - கடவத்தையில் சம்பவம்!
கொழும்பு கண்டி பிரதான வீதியில் கடவத்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் (21) இடம்பெற்ற இவ் விபத்தில் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காவல்துறை அறிக்கையில் மேலும், " கொழும்பு- கண்டி பிரதான வீதியின் கடவத்த, பண்டாரவத்த சந்தியில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பேருந்து முன்னால் பயணித்த உந்துருளியில் மோதியுள்ளது.
மேலதிக விசாரணை
இதன் போது காயமடைந்த உந்துருளி சாரதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்"எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா
