கடை மீது சரிந்து விழுந்த பாறைகள் - பேராதனை பல்கலை விரிவுரையாளர் பலி
கடுகன்னாவவில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 31 வயதான பேராதனை பொறியியல் பீட விரிவுரையாளர் லஹிரு என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை சம்பவ இடத்திற்கு அருகில் அவரது கார் சிறிதளவு சேதமடைந்திருந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
பஹல கடுகன்னாவ - கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று (22) காலை 9.00 மணியளவில் பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் இந்த விபத்துநேர்ந்துள்ளது.
சம்பவத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் விரிவுரையாளராக இருந்த மாவனெல்ல சியம்பலாபிட்டிய வெலிகல்லவைச் சேர்ந்த லஹிரு சமரக்கோன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
31 வயதான விரிவுரையாளர் வழக்கமாக குறித்த இடத்திற்கு தேநீர் பருக செல்வதாகவும், நேற்றும் வழக்கம் போல் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |