யாழ். குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையான செல்வராசா கஜேந்திரன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (20) காலை குறித்த பிரிவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வு தொடர்பான விசாரணைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் நேற்று (19) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு முன்னிலையாகுமாறு செல்வராசா கஜேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
காவல்துறையினருக்குத் தெரிவிப்பு
எனினும் அம்பாறையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வுக்காக சென்றிருந்தமையால் அவரால் முன்னிலையாக முடியவில்லை என தெரிவித்திருந்தார்.

அத்துடன் குறித்த நிகழ்வை முடித்த பின்னர் விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுவதாக காவல்துறையினருக்குத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கமைய செல்வராசா கஜேந்திரன் இன்று காலை யாழ். குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |