பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள்... வெடுக்குநாறியின் நிலை கல்லுமலையிலும்...
சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயநிர்வாகம் உட்பட மக்கள் தொல்பொருள் திணைக்களத்தால் குழப்பப்பட்டுள்ளனர்.
கல்லுமலையில் தொல்லியல் எச்சங்களை பாதுகாக்கிறோம் என்ற போர்வையிலே பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
தொல்லியல் திணைக்களம் மக்களை குழப்பி வைத்துள்ளது. குருந்தூர் மலையிலும் ஆரம்பத்தில் இப்படியான ஒரு கட்டுமானே முன்னெடுக்கப்பட்டது.
தற்போது அங்கு விகாரை அமைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயம்.
கல்லுமலையில் ஒரு பிள்ளையார் ஆலயம் உள்ளது. அதனை திருத்துவதற்கு உதவிசெய்கின்றோம். ஆலயத்தை தொடர்ந்து நீங்கள் கட்டலாம் என்ற சலுகைகளை கூறி விகாரையை கட்டும் முயற்சியே எதிர்காலத்தில் இடம்பெறும்.
இது தொடர்பாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டாலும், ஆலயநிர்வாகம் உட்பட்ட அந்த மக்கள் குழப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் கவலைக்குறியது.
இந்த ஆபத்தினை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக சமளங்குளம் மக்களும் ஆலய நிர்வாகமும் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் நேற்று வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இது குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடகிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மதகுரு என்று கூட பாராமல் மோசமான முறையில் வேலன் சுவாமி நடாத்தப்பட்டிருந்தார். இது தமிழ்மக்கள் மீதான ஒரு அடக்குமுறை செயற்பாடாகவே உள்ளது.
வடக்கில் குருந்தூர்மலை,வெடுக்குநாறிமலை,தையிட்டி, தற்போது வவுனியா கல்லுமலை என்பன ஆக்கிரமிப்பு செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
பேரினவாத சிந்தனையாளர்களே இப்படியான சிக்கல்கள் ஏற்படுவதற்கு தூண்டுகோலாக உள்ளனர். எனவே மறுக்கப்படும் எமது உரிமைகளை அடைவதற்காக நாம் குரல்கொடுக்க வேண்டும்....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |