கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்! நிர்வாகப் பிரச்சினையை இனவாத அரசியலாக்க வேண்டாம்

By Independent Writer Aug 17, 2026 01:25 PM GMT
Report

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான விவகாரம் முழுமையாக அரசாங்க சுற்றறிக்கைகள், தாபன விதிக்கோவை, சுகாதார அமைச்சின் நடைமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட சேவை விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்க்கப்பட வேண்டிய ஒரு நிர்வாக விடயமாகும்.

குறித்த சீருடை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறை என்ன, அது எந்தப் பணியாளர்களுக்கு பொருந்துகின்றது, அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவற்றை சுகாதார அமைச்சு மட்டத்தில் உரிய முறையில் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தெளிவானதும் நியாயமானதுமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.

முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகள், கலாசார மரபுகள் மற்றும் அடையாளங்களை நாம் மதிக்கின்றோம். எந்தவொரு சமூகமும் தனது மத மற்றும் கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும் மதிப்புடன் வாழ்வதற்கும் உரிமையுடையது என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.

புதிய சிற்றூழியர்களின் சீருடை அவமதிப்பை எதிர்த்து சிற்றூழியர் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கை!

புதிய சிற்றூழியர்களின் சீருடை அவமதிப்பை எதிர்த்து சிற்றூழியர் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கை!

சட்டபூர்வமான விதிமுறை

அதேவேளை, அரச சேவையில் குறிப்பிட்ட பதவிகளுக்கு சீருடை தொடர்பான சட்டபூர்வமான விதிமுறைகள் இருந்தால், அந்த விதிமுறைகள் மதம் அல்லது இனம் பாராமல் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

எனவே, இந்த விவகாரத்தை “தமிழர்களுக்கு எதிரானது” அல்லது “முஸ்லிம்களுக்கு எதிரானது” என்ற இன, மத மோதலாக மாற்றுவது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.

அத்தோடு கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணனையும், அவரது குடும்பத்தினரையும் இலக்காகக் கொண்டு சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தனிநபர் அவதூறுகள் மற்றும் சமூகத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

நீண்டகால அனுபவமுள்ள ஒரு அரச வைத்திய அதிகாரியின் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், அதனை உரிய நிர்வாக மற்றும் சட்ட நடைமுறைகளின் ஊடாக முன்வைக்க வேண்டும்.

அவரது குடும்பத்தினரை இதில் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் தாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஷ் குறித்த வைத்திய அதிகாரி ஒரு உளவு அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுகிறார் என்ற சந்தேகத்தை வெளியிட்டிருப்பதாக கூறப்படும் கருத்து மிகவும் பாரதூரமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் அவை உரிய சட்ட மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆதாரமின்றி ஒரு அரச வைத்திய அதிகாரியை இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்துவது பொறுப்பான அரசியல் அணுகுமுறை அல்ல.

 கல்முனையைப் பொறுத்தவரை, கடந்த காலங்களிலும் பல நிர்வாக மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்ந்து சர்ச்சைகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மனு

தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மனு

கல்முனைத் தமிழ் மக்களின் உரிமைகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், கல்முனை உப கல்வி வலய விவகாரம், கல்முனை மாநகர சபை மற்றும் காரைதீவு பிரதேச சபை எல்லை தொடர்பான விவகாரம், நகர அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பான வர்த்தமானி உள்ளிட்ட பல விடயங்களில் கல்முனை தொடர்பான நிறுவனங்களும் நிர்வாக அமைப்புகளும் தொடர்ச்சியாக அரசியல் விவாதங்களுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில், கல்முனையில் உள்ள அரச நிறுவனங்கள் தொடர்பான ஒவ்வொரு விவகாரமும் தொடர்ச்சியாக அரசியல் சர்ச்சையாக மாற்றப்படுவதன் பின்னால் ஏதேனும் திட்டமிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது.

குறிப்பாக, இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம் கல்முனைத் தமிழ் மக்களின் நிர்வாக, கல்வி, உள்ளூராட்சி மற்றும் நிறுவன ரீதியான உரிமைகள் படிப்படியாக பாதிக்கப்படும் வகையில் ஏதேனும் திட்டமிட்ட அணுகுமுறை முன்னெடுக்கப்படுகின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.

இந்த சந்தேகங்கள் உண்மையா இல்லையா என்பதை ஆவணங்களும் அரச நிர்வாகத் தீர்மானங்களுமே நிரூபிக்க வேண்டும். எனவே, இதனை உணர்ச்சிப்பூர்வமான இனவாத விவாதமாக மாற்றாமல், ஒவ்வொரு விடயத்திலும் சட்டம், வர்த்தமானி, அரச சுற்றறிக்கை மற்றும் நிர்வாக நடைமுறைகள் என்ன கூறுகின்றன என்பதை வெளிப்படையாக ஆராய வேண்டும்.

கல்முனை ஆதார வைத்தியசாலை போன்ற அனைத்து சமூகங்களுக்கும் சேவை வழங்கும் முக்கியமான அரச சுகாதார நிறுவனத்தின் பெயரை தொடர்ச்சியாக தவறான கண்ணோட்டத்தில் சித்தரிப்பதும், அதன் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் தாக்குவதும் மக்களின் நலனுக்கு எந்த வகையிலும் உதவாது.

தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை

தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை

எமது நிலைப்பாடு மிகவும் தெளிவானது

அரச சுற்றறிக்கை இருந்தால் – அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

விதிமுறையில் தெளிவின்மை இருந்தால் – அமைச்சு மட்டத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

நிர்வாகத் தவறு இருந்தால் – உரிய விசாரணை நடத்த வேண்டும்.

அநீதி இருந்தால் – தீர்வு வழங்க வேண்டும்.

முஸ்லிம் மக்களின் மத மற்றும் கலாசார உரிமைகளை நாம் மதிக்கின்றோம். தமிழ் மக்களின் நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான உரிமைகளையும் நாம் பாதுகாப்போம்.

ஒரு சமூகத்தின் உரிமையைப் பாதுகாப்பது மற்றொரு சமூகத்தின் உரிமைக்கு எதிரானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, சீருடை விவகாரத்தை இனவாத மோதலாக மாற்றாமல், சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு, அரச விதிமுறைகளுக்கும் சட்டத்திற்கும் அமைய நியாயமான தீர்வை காண வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026