கபடத்தனமாக ஏமாற்றிய இராஜாங்க அமைச்சர் : சிறிநேசன் குற்றச்சாட்டு
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கபடத்தனமாக ஏமாற்றியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
கல்முனை பிரதேச செயலகத்தினை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறு கோரி இடம்பெற்றுவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியில் தாங்கள் இருந்ததன் காரணமாக அரசாங்கத்துடன் ஒத்துப்போகும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சுயாதீனமாக இயங்குவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுதியான செயற்பாட்டை மேற்கொண்டு வருவதாக போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |