களு கங்கை வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு
Weather
Flood
Kalu Ganga
By Sindu
நிலவும் சீரற்ற வானிலையை முன்னிட்டு களுகங்கை ஆற்றுப்படுகைக்கைக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், குறித்த பகுதிகளின் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும், குறிப்பாகக் குறுக்குவீதிகளைப் பயன்படுத்துவோரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நிலைமையைக் கருத்திற்கொண்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |