கொரோனா நோயாளர்களால் நிரம்பி வழியும் விடுதிகள் - கடும் நெருக்கடியில் களுபோவில வைத்தியசாலை
corona patient
crisis
kalubowila hospital
By Sumithiran
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வைத்தியசாலைகள் திணறி வருகின்றன.
விடுதி நெருக்கடி, ஒட்சிசன் பற்றாக்குறை மற்றும் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை என வைத்தியசாலைகள் பல்வேறு சிரமங்களை நாளாந்தம் எதிர்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் உள்ள 7 விடுதி அறைகளில் 300ற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அந்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
இதனால் வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை தற்போது உச்ச அளவுக்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமன்றி பணிக்குழாமில் 30 பேர்வரை தொற்றுக்கு இலக்காகியிருப்பதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி