அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல்: வரலாறு படைக்க போகும் கமலா ஹாரிஸ்!
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்(Kamala Harris) வெற்றி பெறுவது நிச்சயம் என்று பிரபல அமெரிக்க(USA) நிறுவனமொன்று அறிக்கையொன்று வெளியிடுள்ளது.
அமெரிக்காவில்(USA) நவம்பர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் (Donald Trump) போட்டி நிலவுகின்றது.
ஜனநாயக கட்சி சாப்பில் பைடன் போட்டியிட இருந்த நிலையில், உடல்நிலை கருத்தில் கொண்டு அவர் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் அந்நாட்டின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கமலா ஹாரிஸின் வெற்றி
அதில் நாடு முழுக்க ஜனநாயக கட்சிக்கு ஆதரவான அலை உருவாகி வருவதாகவும் இதனால் ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவது நிச்சயம் என்று கூறப்பட்டுள்ளது.
ஜோ பைடன் போட்டியில் இருந்து வரை ட்ரம்ப் முன்னிலையில் இருந்த நிலையில், கமலா ஹாரிஸ் வந்தவுடன் நிலைமை மொத்தமாக மாறியது. ஒரு மாதத்தில் ஜனநாயக கட்சியின் ஆதரவு 3 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்யும் ஸ்விக் மாகாணங்களில் கமலா ஹாரிஸ் கை தான் ஓங்கி இருக்கிறது.
இதன் காரணமாக இந்த ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபை ஜனநாயக கட்சி வசம் செல்லும். அதேநேரம், அந்நாட்டின் மேல் சபையாகக் கருதப்படும் செனட் தொடர்ந்து குடியரசு கட்சியின் கைகளிலேயே இருக்கும். பைடன் அதிபர் ரேஸில் இருந்த வரை இரு கட்சிகளும் வேண்டாம் மாற்றுக் கட்சி வேண்டும் என்று சொன்னவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
ட்ரம்பிற்கான ஆதரவு
ஆனால், பைடன் விலகி கமலா ஹாரிஸ் உள்ளே வந்ததும், மாற்றுக் கட்சியை நோக்கிச் செல்வோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
அவர்கள் மீண்டும் ஜனநாயக கட்சியை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். அதாவது பைடன் இருந்த போது மாற்றுக்கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக 10% பேர் சொன்ன நிலையில், இப்போது அது 6%ஆகக் குறைந்துள்ளது.
தேர்தல் நெருங்கும் போது இது மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பைடன் இருந்த வரை ஜனநாயக கட்சியினரேமாற்றுக் கட்சியை நோக்கி அதிகம் சென்றுள்ளனர்.
ஆனால், இப்போது ட்ரம்பின் குடியரசு கட்சிக்கு வாக்களிக்க இருந்தோர் மெல்ல மாற்றுக் கட்சியை நோக்கிச் செல்கிறார்களாம். இதனால் ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது ட்ரம்பிற்கான ஆதரவு மேலும் குறையும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் கமலா ஹாரிஸுக்கு இப்போது பிரச்சினை என்றால் அது அமெரிக்கப் பொருளாதாரம் தான். அமெரிக்கா பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
ஜனாதிபதி தேர்தல்
தேர்தலுக்கு முன்பு ஒரு வேலை அமெரிக்காவில் மந்த நிலை ஏற்பட்டால் சென்றால் பலர் வேலையிழக்கக்கூடும். ஆளும் கட்சியாக இருப்பதால் கமலா ஹாரிஸ் தரப்புக்கு இது பாதகமாக முடியும்.
மறுபுறம் அமெரிக்காவை மீண்டும் வல்லரசாக்கப் போகிறேன் எனச் சொல்லும் வரம்பிற்கு இது நல்ல செய்தியாக இருக்கும். ஆனால், இதற்கான வாய்ப்பு குறைவு எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும் போது அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் அலை அதிகரித்து வருவதாகவும் கமலா ஹாரிஸ் ஜனாதிபதி தேர்தல் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது.
கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் வெல்லும்பட்சத்தில் அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாகும் முதல் பெண் என்ற சரித்திர சாதனையை அவர் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |