போரில் கொல்லப்பட்டுள்ள 40,000பலஸ்தீனியர்கள்: ஹமாஸ் வெளியிட்டுள்ள தகவல்
இஸ்ரேல் (Israel)-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் நடத்தி வரும் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபரில் ஆரம்பமான இஸ்ரேல்-ஹமாஸ் போரானது தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இதற்கமைய இந்த போரில், இதுவரை 40,005 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும், 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நிலப்பரப்பில் இது 1.7 % ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட 40,000 பேர்!
மேலும், இந்த போர் நடவடிக்கையில், செயற்கைக்கோள் புகைப்படங்களின் தரவுபடி 60% கட்டிடங்கள் காசாவில் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளததாகவும் கூறப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக தெற்கு பகுதி நகரான ரஃபா மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து இருப்பதை இந்த புகைப்படங்கள் எடுத்துக் காட்டுகிறது.
இதேவேளை, காசாவில் (Gaza) தொடரும் போர் சூழலுக்கு மத்தியில், இஸ்ரேல் (Israel) இராணுவம் மக்களை இடம்பெயருமாறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், காசா பகுதியில் உள்ள அல்-கராரா 3 மற்றும் அல்-சதார் சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்புகளான 38, 39, 41, 42 இல் வசிப்பவர்கள் அனைவரையும் தங்கள் வீடுகள் மற்றும் தங்குமிடங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவத் தொடர்பாளர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |