மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் நடிகர் கமல் ஹாசன்
இந்தியாவின் பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் (மநீம)கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்(kamal haasdan), நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது டார்பாக மக்கள் நீதிமய்யம் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம்
தலைவர் கமல் ஹாசன் வருகிற ஜூலை 25-ஆம் திகதி அன்று (25-07-2025) நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். " என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் பதவியேற்பு!!
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) July 15, 2025
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை… pic.twitter.com/SkzygJeCXn

