அதிக முறை எவரெஸ்டை ஏறி சாதனை புரிந்தவர் யார் தெரியுமா!
எவரெஸ்ட் சிகரத்தை (Mount Everest) அதிகமுறை ஏறியவா் என்ற சாதனையை நேபாளத்தின் (Nepal) புகழ்பெற்ற மலையேற்ற வீரரான கமி (Kami Rita) ரீட்டா படைத்துள்ளார்.
அதன்படி, நேற்றைய தினம் (12) அவர் 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தான் படைத்த சாதனையை தானே முறியடித்துள்ளார்.
54 வயதான கமி ரீட்டா நேற்று (12) காலை 7:25 மணிக்கு எவெரெஸ்ட்டின் 8,848 மீற்றர் உயரத்தை 29ஆவது முறையாக ஏறி சாதனை புரிந்துள்ளார் என நேபாள சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குநா் ராஜேஷ் குருங்(Rajesh Gurung)தெரிவித்தாா்.
முதல் முறையாக
எவரெஸ்ட் மலையேறும் பயணத்தில் துணை ஊழியராக கமி 1992இல் பணியாற்றத் தொடங்கினாா். அப்போதிலிருந்து, கமி பயமின்றி பல பயணங்களை மேற்கொண்டாா்.
முதல் முறையாக 1994ஆம் ஆண்டு தனது 24ஆவது வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தாா். எவரெஸ்ட் சிகரத்தைத் தவிர கே 2 சிகரம், சோ ஓயு, லோட்சே மற்றும் மனஸ்லு ஆகிய சிகரங்களிலும் எறி அவா் சாதனை புரிந்துள்ளாா்.
சாதனையைப் பதிவு செய்தாா்
கடந்த ஒரே ஆண்டில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி 28ஆவது முறையாக சாதனையைப் பதிவு செய்தாா்.
அவரின் 29ஆவது எவரஸ்ட் பயணத்தில் அவருடன் 20 மலையேற்ற வீரா்கள் பயணித்தனா். அதில் 13 போ் நேபாளத்தைச் சோ்ந்தவா்கள். மீதமுள்ளவா்கள் அமெரிக்கா (United States), கனடா (Canada) மற்றும் கஜகஸ்தான் (Kazakhstan) நாடுகளைச் சோ்ந்தவா்கள். அனைவரும் நேற்று வெற்றிகரமாக சிகரத்தை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |