பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் தித்தவெல்மங்கட பகுதியில் இன்று (05) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பேருந்துடன் மோதிய மற்றுமொரு வான் சேதமடைந்துள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்