இனி இருக்க மாட்டார்கள் : ஈரானுக்கு ட்ரம்ப்பின் அதிரடி எச்சரிக்கை
ஈரான் - அமெரிக்கா, உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையிலான போர்களை விரைவில் தீர்த்து வைக்க அல்லது வெற்றிபெற போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கின் சிராகியூஸ் நகரில் நேற்று (09) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈரான் போருக்கான தீர்வு எப்படியாயினும் மிக விரைவாகக் கிடைக்கும் என மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டும்
அத்துடன் அவர்கள் எங்களுக்கு அனைத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் இனி இருக்க மாட்டார்கள் எனவும் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இம் மோதல்களுக்கான தீர்வு காணும் நடவடிக்கைகள் மிக வேகமாக முன்னேறி வருகின்றன எனவும் அவர் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரான்-அமெரிக்கா மற்றும் ரஷ்யா-உக்ரைனுக்கு எதிரான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், போரினால் உயிரிழப்புக்களும் பொருட் சேதங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் போரினை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அவ்வப்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |