ஷரந்தி விடயத்தில் நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறியுள்ளதாம் சிறைச்சாலை
ஷிரந்தி ராஜபக்சவிற்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பாக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தெளிவான உத்தரவு ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் புறக்கணித்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே குற்றம் சாட்டியுள்ளார்.
அவரை சிறையில் அடைக்கும் போது, நவலோக மருத்துவமனையில் உள்ள அவரது வழக்கமான கண் மருத்துவரிடம் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், அந்த நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து, சிறைச்சாலை அதிகாரிகள் அவரை சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் அனுப்புவதை புறக்கணித்துள்ளதாக கமகே சுட்டிக்காட்டுகிறார்.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எந்த சட்ட உரிமையும் இல்லை
ஒரு நோயாளியின் சிகிச்சை தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் கைகளுக்கு வந்துவிட்டதா என்று அவர் கேள்வி எழுப்புகிறார், இது மிகவும் வருந்தத்தக்க நிலை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், நீதிமன்றத்தின் நேரடி உத்தரவு இருக்கும் நிலையில், அதை மாற்றுவதற்கோ அல்லது புறக்கணிப்பதற்கோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எந்த சட்ட உரிமையும் இல்லை என்றும், இது முற்றிலும் தவறான செயல் என்றும் மனோஜ் கமகே தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |