ஈஸ்டர் தாக்குதல் : தன்னை கைது செய்யும் மனு தள்ளுபடி : உச்சநீதிமன்ற படியேறிய கோட்டாபய
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாகத் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும்படி கோரி தாக்கல் செய்த மனுவை, முதல் கட்டத்திலேயே தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
எதிர்மனுதாரர்களுக்கு முறைப்படியான அறிவிப்புகளை அனுப்பாமலேயே, மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒக்டோபர் 1 அன்று அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
கோட்டாபயவின் கோரிக்கை
தனது மேல்முறையீட்டு மனுவில், காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பு அதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.

இந்த மேல்முறையீட்டின் மூலம், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவின் சட்டபூர்வத்தன்மையை எதிர்த்தும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தன்னைக் கைது செய்வதிலிருந்து அதிகாரிகளைத் தடுக்கும் உத்தரவைப் பெறவும் முன்னாள் ஜனாதிபதி கோரியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |