பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர் - வார ராசிபலன்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். விரும்பிய பொருள்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைத் தவிர்த்து அலுவலக வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை அரவணைத்துச் செல்வீர்கள்.
விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் தொடரும். அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை நினைத்தபடி முடித்து விடுவீர்கள்.
கலைத்துறையினர் நல்ல வருமானம் தரும் ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தின் ஒற்றுமையைப் பேணிக்காப்பீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சிம்மம் ராசி
தொழிலில் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் உரிய ஆலோசனைகளை உயரதிகாரிகளிடம் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனையில் எதிர்பாராத பணவரவு உண்டாகும்.
விவசாயிகள் சக விவசாயிகளுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளின் மேல் கட்சி மேலிடம் கருணையுடன் நடந்து கொள்ளும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
பெண்கள் கணவரின் அன்பும், பாசமும் பெறுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
தனுசுராசி
குஎதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள்.
விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.
கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் பெற்றோரை அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்கள் புதிய பாடப் பிரிவுகளில் சேர்வீர்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |