அனோஜனுக்கு பொதுமன்னிப்பு : பகிரங்க வேண்டுகோள் விடுத்த இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்
மனிதாபிமான அடிப்படையில் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய அரசிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரிய,பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது முகநூல் பதிவில், இந்த மனிதாபிமான கோரிக்கையை ஆதரிப்பதில் மதம் அல்லது இனம் கடந்து இலங்கையர்கள் ஒன்றுபட்டு நிற்பதை ஜெயசூரிய சுட்டிக்காட்டினார்.
அனோஜனுக்கு மன்னிப்பு - சவூதி அரசிடம் பணிவுடன் கோரிக்கை
"இலங்கையர்களாகிய நாம் மதம் அல்லது இனம் கடந்து ஒன்றிணைந்து நிற்கிறோம். மனிதாபிமான அடிப்படையில் எங்கள் சக இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து கனிவுடன் பரிசீலிக்குமாறு சவூதி அரேபிய அரசிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது பதிவில் சவூதி வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் மற்றும் சவூதி வெளியுறவு அமைச்சகம் ஆகியோரையும் ஜெயசூரிய குறிப்பிட்டிருந்தார்
அனோஜனுக்கான மன்னிப்புக் கோரும் முயற்சிகளுக்கு, இலங்கையின் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரின் குரலாக இந்த முன்னாள் தலைவரின் வேண்டுகோள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |