கேள்விக்குறியாகும் பாதுகாப்பு: மாணவர் மீது அத்துமீறல்: ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறை
மாணவர் ஒருவரை தவறான முறைக்குட்படுத்திய மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஆசிரியை ஒருவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த ஆசிரியை, பாதிக்கப்பட்ட மாணவரை பாடசாலையிலிருந்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தவறான முறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவமானது கடந்த 2019ஆம் ஆண்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு
வழக்கை விசாரித்த மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதியால் குறித்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 250,000 ரூபாய் வீதம் மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் மொத்தம் 750,000 ரூபாயை பாதிக்கப்பட்டவதுக்கு இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மொனராகலையின் ஹிந்திகிவுல பகுதியைச் சேர்ந்தவரும், இரு குழந்தைகளின் தாயுமான இவர் மீது சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |