யாழிற்கான தொடருந்து சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு : பொதுமக்களுக்கு கடும் சிக்கல்
வடக்கு தொடருந்து பாதையில் தினமும் இயக்கப்பட்டு வந்த 18 தொடருந்து சேவைகளின் எண்ணிக்கை தற்போது 8 ஆகக் குறைந்துள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டித்வா சூறாவளிக்கு முன்னர் வடக்கு பாதையில் தினமும் 18 தொடருந்து சேவைகள் இடம்பெற்ற போதிலும், தற்போது அது 8 சேவைகளாகக் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "டித்வா சூறாவளி வருவதற்கு முன்னர் வடக்கு தொடருந்து பாதையில் நாளொன்றுக்கு 18 தொடருந்து சேவைகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது 8 தொடருந்து சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
யாழ் தேவி கடுகதி தொடருந்து
குறிப்பாக புதன்கிழமைகளில், வடக்கு தொடருந்து பாதையில் நகரங்களுக்கு இடையிலான அதிவேக தொடருந்து மற்றும் இரவு அஞ்சல் தொடருந்தைத் தவிர சாதாரண பயணிகள் பயணிப்பதற்கு வேறு தொடருந்துகள் இல்லை.

அதேபோல் இன்னும் ‘யாழ் தேவி’ கடுகதி தொடருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாளே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, மலையக தொடருந்து பாதையில் தினசரி கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, மாத்தளை, கண்டி மற்றும் ஹட்டன் வரை 42 சரக்கு மற்றும் பயணிகள் தொடருந்து சேவைகள் இயங்கின.
34 தொடருந்து சேவைகள்
கடந்த மாதத்தில் இந்தப் பாதையில் கம்பளை வரையிலான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போக்குவரத்து தொடங்கப்பட்ட கையோடு தொடருந்து சேவைகளை வழமைக்குக் கொண்டு வருமாறு நாங்கள் சங்கமாகத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் தற்போது அந்த 42 சேவைகளில் தினமும் 8 சேவைகள் மட்டுமே இயங்குகின்றன. எஞ்சிய 34 தொடருந்து சேவைகளும் இயக்கப்படவில்லை." என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |