மக்கள் இன்றி நடைபெறவுள்ள கண்டி எசல பெரஹரா
srilanka
kandy
peoples
esala perahera
By S P Thas
கொவிட் பெருந்தொற்று நிலைமைகள் காரணமாக இம்முறை கண்டி எசல பெரஹரா மக்களின் பங்குபற்றல் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி தலா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தலா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இம்முறை பெரஹராவை மக்களின் பங்களிப்பின்றி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கியமான அனைத்து பெரஹரா நிகழ்வுகளும் இம்முறை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எசல பெரஹரா நிகழ்வுகளுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்படும் என கண்டி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி