கண்டி எசல பெரஹராவில் கலந்துகொண்ட 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
srilanka
covid19
corona
kandy
esala perahera
By S P Thas
கண்டி எசல பெரஹராவில் பங்கேற்றிருந்த 45 கலைஞர்களுக்கு கொவிட்19 பெருந்தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுமாறான அடிப்படையில் நடனக் குழுக்களைச் சேர்ந்த 76 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் போது 45 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், கொவிட் தொற்று உறுதியான கலைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெரஹராவில் பங்கேற்கும் கலைஞர்களிடம் கண்டி மாநகர சபை சுகாதாரப் பிரிவு எழுமாறான அடிப்படையில் கொவிட் பரிசோதனை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி