இன்று மாலை இடம்பெற்ற விபத்து : 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கண்டியில் இருந்து ஹொரவபொத்தானை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தம்புள்ளை நாவுல உடதெனிய பிரதேசத்தில் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் நாலந்தா அரச வைத்தியசாலை, தம்புள்ளை அரச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு
விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றுமொரு பேருந்தை கடந்து செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பிகள் மற்றும் தொலைபேசி கம்பிகள் மற்றும் அருகில் இருந்த மதில் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
மேலும் விபத்தின் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |