கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணி ஆரம்பம்
அம்பாறை - கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஆதரவாளர்கள் துப்பரவு செய்யும் பணியை ஆரம்பித்துள்ளனர்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் உட்பட மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று (12) இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் மாவீர்களின் குடும்பத்தினர் துயிலும் இல்லங்களுக்கு சென்று நினைவேந்தலில் ஈடுபடும் நிலையில் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்து அலங்கரிக்கும் ஏற்பாடுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி முன்னெடுத்து வருகின்றது.
துப்புரவு செய்யும் பணி
இதற்கமைய நவம்பர் முதலாம் திகதி மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் பணி ஆரம்பித்து மாவீரர் நினைவு தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி ஆரம்பித்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பிலுள்ள மாவடி முன்மாரி, வாகரை - கண்டலடி ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களையும் துப்பரவு பணியை முன்னெடுத்து வருவதுடன் அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்யும் பணியை நேற்று ஆரம்பித்து வைத்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |