கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா துபாயில் கைது!
Dubai
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
பாதாள உலக குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன என்ற வனாதே சது துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, துபாய் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
தற்போது காவல் வைக்கப்பட்டுள்ள இரண்டு குற்றவாளிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை அந்நாட்டு சட்டநடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் நாடுகடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்