கராபிட்டி மருத்துவமனையில் 20 கொரோனா நோயாளிகள்! சிறுவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் பாதிப்பு
கராபிட்டி மருத்துவமனையின் 36 ஆவது வார்டில் சிகிச்சை பெற்று வந்த 20 பேருக்கு இன்று (29) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
காலி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநர் அலுவலகம் இதை தெரிவித்துள்ளது.
அவர்களில் ஹபராதுவ, ரத்கம, தெடன்துவ, மாபலகம, அகுருஸ்ஸ, கிங்தொட்ட, ஹிக்கடுவ, வஞ்சாவல மற்றும் காலி ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் உள்ளனர்.
எனினும் அவர்களில் 12,14,17 வயதுடைய மூன்று பள்ளி குழந்தைகளும், 20,24,25 வயதுடைய மூன்று இளைஞர்களும் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏனையோரின் வயது 59,63,60,65,64,38.42,77.80 என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் சிகிச்சைக்காக ஆரச்சிகந்த, பொல்வத்த மற்றும் கரந்தெனிய மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கராபிட்டி மருத்துவமனையின் 36 வது வார்டு சுவாச நோய் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒரு வார்டு ஆகும்.