இலங்கையில் தமிழ் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும்: கனடாவில் இருந்து ஒலித்த குரல்
இலங்கையில் (Sri Lanka) நடந்த தமிழ் இனப்படுகொலையின் 15 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூறுவதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் அவர் தெரிவித்ததாவது, “15 ஆவது ஆண்டு நினைவு தினம் இதுவாகும் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர் மற்றும் பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.
இந்த சோகமான சந்தர்ப்பத்தை நாம் நினைவுகூரும் போது, இதில் உயிர்பிழைத்த அனைவரையும் நான் அடையாளம் காண விரும்புகிறேன்.
பொறுப்புக்கூறல்
இலங்கையின் இரண்டு முன்னாள் அதிபர்கள் உட்பட இந்தக் கொடுமைகளைச் செய்தவர்களுக்கு பொறுப்புக்கூறல் இருப்பது மிகவும் முக்கியமானது.
அதனால்தான் கனேடிய அரசாங்கம் 2022 ஜனவரி 10 அன்று மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உட்பட நான்கு இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தது.
அத்தோடு, 2022 மே 18 அன்று கனேடிய நாடாளுமன்றம் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்ததை இனப்படுகொலை என்று அங்கீகரித்து அடையாளப்படுத்தியது.
மனித உரிமைகள்
ஒவ்வொரு மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக இன்று கொண்டாடுவதுடன் என்ன நடந்தது என்பதற்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கேட்டு போராடும் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் செயல்முறை உட்பட நீதியைப் பெறுவதற்காக பிரித்தானிய தமிழ் மன்றம் மற்றும் அவர்களுடன் இணைந்து செயல்படும் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்
நாங்கள் முன்னோக்கிப் பார்க்கும் போது, வலிமையான மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு தேசத்தை நாங்கள் கட்டியெழுப்புகிறோம் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
மேலும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய ஒரு நாளை எதிர்நோக்குகிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |