யாழில் இராணுவ முகாமில் இலட்சக்கணக்கில் மின் கட்டணம்...! வெளியேறிய படையினர்
யாழில் (jaffna) சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய செலுத்த வேண்டிய மின்சார கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் (Green Memorial Hospital) ஒரு பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினர் முகாமில் இருந்த படையினரே இவ்வாறு வெளியேறி உள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மின்சாரத்திற்கான கட்டணம்
சுமார் நான்கு ஆண்டுகாலமாக முகாமிற்கு வழங்கப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தாத நிலையில், நிலவையாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்த வேளை முகாமை விட்டு வெளியேறியுள்ளனர்.
வைத்தியசாலை தென்னிந்திய திருச்சபையின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதனால், அது தொடர்பில், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ஆண்டகையைத் கேட்டபோது “ இராணுவத்தினர் குறித்த கட்டடத் தொகுதியில் தங்கியிருந்தனர் .
அந்தக் காலப்பகுதியில் முகாமின் மின் கட்டணமாக 4 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபா நிலுவை செலுத்தப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை இராணுவமே செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |