அமெரிக்க தூதுவருக்கு எதிராக சட்டநடவடிக்கை -கரன்னாகொட அறிவிப்பு
Colombo
Julie Chung
By Sumithiran
தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கைக்கான அமெரிக்க துதுவர் ஜூலி சங்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தன்னையும் தனது மனைவியையும் அமெரிக்காவுக்குள் நுழையத் தகுதியற்றவர்கள் என அறிவித்த சம்பவத்தை வெளிவிவகார அமைச்சருக்கு முன்கூட்டியே தெரிவிக்க அமெரிக்கத் தூதுவர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி கரன்னாகொட தூதுவருக்கு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்கவில்லை
முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் தமக்கு இவ்வாறானதொரு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எவ்வித குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரிக்கவில்லை எனவும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி