அரசியல் கட்சிகளாலேயே கருணா துரோகி ஆக்கப்பட்டார்! சரவணமுத்து ஜெயக்குமார் தகவல்
party
political
karuna
By Vanan
அரசியல் கட்சிகளாலேயே கருணா துரோகி ஆக்கப்பட்டார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் வடமாகாண தலைமை ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆயினும் மக்கள் உண்மையை உணர்ந்துள்ளதாக வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சரவணமுத்து ஜெயக்குமார்,
எமது கட்சி அனைத்து மக்களுக்குமானது - மக்கள் நலன் சார்ந்து தூய்மையானதாக இருக்கும்.
வன்னி மண் போரினால் பாதிக்கப்பட்ட ரத்தபூமியாக இருக்கிறது. அந்த நிலமையை மாற்றவேண்டும்.
எதிர்காலத்தில் வடக்கில் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக நாம் வலம்வருவோம் என உறுதியாக தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி