தலைவருக்கு கருணா செய்த துரோகம்! மீண்டும் வீண்போனது நம்பிக்கை - ஜெயசிறில் கவலை
ltte
leader
karuna
jeyasril
By Vanan
தேசிய தலைவரை ஏமாற்றிய கருணாவிற்கு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் பெரிய விடயமே இல்லை என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கவலை தெரிவித்தார்.
காரைதீவு கனகரட்ணம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தேசிய ரீதியாக செயற்பட்ட தலைவரையே ஏமாற்றிய நபர், கல்முனையை தரமுயர்த்தி தருவார் என நாங்கள் நம்பி ஏமாந்தமைக்கு யாரையும் குறை சொல்ல முடியாது.
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவார் என்கிற நம்பிக்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கல்முனை தமிழ் மக்களில் குறிப்பிட்ட தொகையினர் வாக்களித்துள்ளனர். ஆனால் இறுதியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது என்றார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்