பிரித்தானிய அரசை கடுமையாக சாடும் கருணா அம்மான்
பிரித்தானிய (United Kingdom) அரசாங்கத்தை “மொக்கு அரசாங்கம் ” என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (Karuna Amman) கடுமையாக சாடியுள்ளார்.
கல்குடா (Thalawila) தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், கிழக்கு தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கையே தற்போது இடம்பெற்று வருவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் பிரதி அமைச்சர் பிரித்தானிய சிறைச்சாலையில் தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கண்டுபிடிக்காத குற்றச்சாட்டை இப்போது தான் பிரித்தானிய அரசாங்கம் கண்டுபிடித்துள்ளதா எனவும் கேள்வியெழுப்பினார்.
பிரித்தானிய அரசாங்கத்தை “மொக்கு அரசாங்கம் ” எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் இதன்போது விமர்சித்துள்ளார்.
மேலும் பிரிட்டிஸ் அரசாங்கத்தில் நான் 2006 கைது செய்யப்பட்டு அங்கு சிறைச்சாலையில் 8 மாதங்கள் இருந்தேன் அப்போது 8 மாதம் இருந்த போது கண்டுபிடிக்காத குற்றைச்சாட்டை இப்போது தான் பிரிட்டன் அரசாங்கம் கண்டுபிடித்துள்ளது எப்படியான ஒரு மொக்கு அரசாங்கம் அந்தநேரம் கண்டுபிடித்து கையில் விலங்கைபோட்டு கொண்டு சென்றிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச மரியாதையடன் கட்டுநாயக்கா விமான நிலையம்வரை என்னை பாதுகாப்புடன் கொண்டுவந்தார்கள் அப்படிபட்ட பிரிட்டிஸ் அரசாங்கத்துக்கு இப்பதான் விளங்கியிருக்கு கருணா அம்மான் பிழை விட்டுள்ளார்.
ஆகவே இது எல்லாம் கிழக்கு தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கை இதற்காக புலம் பெயர்ந்து வாழுகின்ற சில அருவருடிகள் ஒத்துழைத்து வருகின்றனர் எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
