காவல்துறை தாக்கியது பலநாட்களாக வலிக்கிறது! சிரமத்தில் கஸ்ஸப்ப தேரர்
கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு திருகோணமலை நீதிமன்றத்திற்கு எப்படிச் செல்வது என அனுராதபுரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருகோணமலை நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட பிடியானை உத்தரவு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நடந்து செலலக் கூட முடியாத நிலை
காவல்துறையினர் எங்களைத் தாக்கினார்கள், எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. கை, கால்கள் வலிக்கின்றன. வைத்தியசாலைக்குச் சென்றால் எங்களை கொலை செய்ய முயற்சிக்கின்றார்கள்.

அதனால் நாட்டு மருத்துவ முறையில் சிகிக்சைப் பெற்றுக்கொண்டோம். இங்கிருந்து நடந்து செலலக் கூட முடியாத அளவிற்கு உடல் மிகவும் சோர்வாக இருக்கின்றது.
இதில், திருகோணமலைக்குச் செல்வது எப்படி? மிகவும் சிரமமாக உள்ளது. முதுகு வலிக்கின்றது. இதைப் பார்த்தல் தெரியவில்லையா?
காவல்துறை தாக்கிய காயங்கள் பல நாட்கள் கடந்தும் இன்னும் வலிக்கின்றன. அதன் பின்னர் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கத் தவறிய அரசாங்கத்திற்கு எதிராக நாம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தோம்.
தண்ணீர்கூட அருந்தவில்லை
தண்ணீர்கூட அருந்தவில்லை. நேற்று மதிய உணவு அருந்திய பின்னர் உண்ணாவிரதத்தை நாங்கள் ஆரம்பித்தோம். எனவே, நாங்கள் சட்டவாகத்திற்கு பயப்படவில்லை. நிறைவேற்று அதிகாரத்திற்கும் பயப்படவில்லை. நீதித்துறைக்கும் பயப்படவில்லை.

மரணத்திற்கே பயப்படாத எங்களை இதற்காகவெல்லாம் பயமுறுத்த முடியுமா. எங்களை சிறையிலடைக்க நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்.
விகாரமகாதேவி பூங்காவில் எம்மைத் தாக்கினார்கள். அங்கும் பொறுத்துக்கொண்டோம். அதேபோல, புத்த பெருமானின் புனித தாதுக்கள் வைக்கப்பட்டிருக்கும் அநுராதபுரத்திலும் எம்மைத் தாக்கினார்கள்.
தாக்கியப் பின்னர் எமது துயரங்களைத் தெரிவிப்பதற்குக் கூட இடமளிக்கவில்லை. அதர்மமான விடயங்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |