கச்சதீவை விடுங்கள் இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனாவிற்கு பிரதமரின் பதில் என்ன..!
இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது.இதிலும் குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் பிரசாரங்களில் கச்சதீவு விவகாரம் அனல் பறக்கிறது.
கச்சதீவை இலங்கையிடமிருந்து திரும்பப் பெறுவதே இலக்கு என்கிறார் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை.(Annamalai)
இந்த நிலையில் கச்சதீவு பிரச்னை குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லாவிடம் (farooq-abdullah) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர்,
இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா
“வங்கதேசத்துக்கு நமது நிலத்தை பிரதமர் அளித்துள்ளார். லடாக்கில் உள்ள இந்திய பகுதிகளை சீனா கைப்பற்றியுள்ளது. அருணாச்சல் மாநில பகுதிகளுக்கு நேற்று சீனா பெயர் வைத்துள்ளது.
#WATCH | On the Katchatheevu Island issue, Former J&K CM and NC leader Farooq Abdullah says, "...PM gave India's land to Bangladesh. China has occupied our land in Ladakh and yesterday they also took the names of the villages of Arunachal Pradesh. They (BJP) will not say anything… pic.twitter.com/lWHtgMaKZ2
— ANI (@ANI) April 2, 2024
இதைப் பற்றியெல்லாம் பாஜக எதுவும் பதிலளிக்கவில்லை. ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒருவரைப் பார்த்து ஒரு விரலை நீட்டினால், 3 விரல்கள் உங்களை நோக்கி இருக்கும்” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |