வெளிநாடு செல்லவுள்ளோருக்கு வந்த அறிவிப்பு
srilanka
pcr test
abroad
By Sumithiran
வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு எழுமாறாக கொவிட் 19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோருக்கு, விமான நிலைய வளாகத்தில் வைத்தே அடுத்தவாரம் முதல் இந்த சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள தடையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி