இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது கட்டுநாயக்க விமான நிலையம் - முழு விபரம் இதோ....

People Bandaranaike International Airport Prasanna Ranatunga
By Vasanth Jan 21, 2021 11:44 AM GMT
Report

  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் உல்லாசப் பயணிகளுக்காக திறக்கப்படுகிறது.. மேற்படி விமான நிலையம் கடந்த வருடம் மார்ச் மாதம் 19ஆம் திகதி சுற்றுலா பயணிகளுக்காக மூடப்பட்டது.

அரசாங்கம் மீண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி அவர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

நேற்றைய தினம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான குழுவொன்று விமான நிலையத்திற்குச் சென்று முன்னேற்பாடுகளை பார்வையிட்டது. சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்குள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதனையடுத்து அவர்கள் இங்கு வந்ததும் மீண்டும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இதன் போது அமைச்சர் தெரிவித்தார். சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் முன்னோடி நடவடிக்கையாக உக்ரைனிலிருந்து முதற்கட்டமாக சுற்றுலாப்பயணிகள் மத்தள விமான நிலையத்தினூடாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக நடைமுறையிலுள்ள சட்டங்களில் தளர்வுகளை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அதேவேளை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளுக்காக 50 ஹோட்டல்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது. இந்த ஹோட்டல்களில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு உள்ளூர் உல்லாசப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதென அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த அனைத்து ஹோட்டல்களும் கொழும்புக்கு வெளியேயுள்ள பிரதேசங்களிலுள்ளவை என்றும் அவை சினமன், தாஜ், ஜெட்வின், ஷிட்ரஸ், அமாயா, மற்றும் ஷெரடன்ஸ் ஹோட்டல் வலையமைப்புக்கு உட்பட்ட ஹோட்டல்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஹோட்டல் பகுதியை அடுத்துள்ள மக்கள் ஹோட்டல் பிரதேசத்திற்குள் பிரவேசிக்காத வகையில் அதனை அண்டிய கடற்கரை பகுதிகளில் வேலிகளை அமைப்பதற்கும் மேற்படி அதிகார சபையினால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை வெளிநாடுகளிலிருந்து வரும் உல்லாசப் பிரயாணிகள் இந்த ஹோட்டல்களில் 14 தினங்கள் கண்டிப்பாக தங்கியிருக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 55 ஹோட்டல்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்தவையென தெரிவு செய்யப்பட்டு அவை அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026