கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படப்போகும் மாற்றம்
பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வரவேற்பிடத்தை மறுவடிவமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) BIA இற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (ASSL) நிறுவனத்தின் தவிசாளர் ஓய்வு பெற்ற எயார் சீஃப் மார்ஷல் ஹர்ஷா அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அதன்படி, நெரிசலைக் குறைக்க ஏரிஎம் (ATM) இயந்திரங்களை இடமாற்றம் செய்தல் மற்றும் அதிகரித்தல், மிகவும் விசாலமான மற்றும் வரவேற்கத்தக்க சூழலை உருவாக்க வரவேற்பிட பகுதியை விரிவுபடுத்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ ஒரு மைய பயணத் தகவல் கவுண்டரை நிறுவுதல் ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்கான வரவேற்பு
இது சுற்றுலாப் பயணிகள் அன்புடன் வரவேற்கப்படுவதையும் வருகையின் போது உதவப்படுவதையும் உறுதி செய்யும் தவிசாளர் ஓய்வு பெற்ற எயார் சீஃப் மார்ஷல் ஹர்ஷா அபேவிக்ரம என தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, 2028 மார்ச் மாதத்தில் இரண்டாவது முனையம் திறக்கப்படும் வரை, விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கும் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை நிர்வகிப்பதற்கும் AASL மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |