கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் மோதிய பறவை… ஆபத்தில் இருந்து தப்பிய பயணிகள்!

Bandaranaike International Airport Sri Lanka Turkey
By Sathangani Jul 11, 2026 05:38 AM GMT
Report

புதிய இணைப்பு

கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. 

இன்று (11) காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோதே இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்திருந்த குறித்த விமானம் காலை 10:24 மணிக்கு கட்டுநாயக்கவில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

இந்த அவசரநிலையை எதிர்கொள்வதற்காக விமான நிலைய நிர்வாகத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் மோதிய பறவை… ஆபத்தில் இருந்து தப்பிய பயணிகள்! | Katunayake Istanbul Flight Struck By Bird

முதலாம் இணைப்பு

கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கி இன்று (11) காலை புறப்பட்ட ஏ330 (A330) ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது.

குறித்த விமானம் தற்போது நீர்கொழும்பு களப்பு கடற்பரப்பிற்கு மேலாகப் பறந்து, எரிபொருளைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பாதுகாப்பான அவசரகால தரையிறக்கத்திற்குத் தயாராகும் வகையில் எரிபொருளை குறைத்தபடி, அந்த விமானம் முன்னதாக சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் : பிரதி அமைச்சர் அறிவிப்பு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் : பிரதி அமைச்சர் அறிவிப்பு

கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்டது 

TK-731 என்ற இலக்கமுடைய இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் மோதிய பறவை… ஆபத்தில் இருந்து தப்பிய பயணிகள்! | Katunayake Istanbul Flight Struck By Bird

இந்த விமானம் அகலமான உடல் அமைப்பைக் கொண்ட (Wide-body) ஏ330 ரக விமானம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மேற்கொண்டு வருவதுடன் பயணிகளின் பாதுகாப்பு கருதி விமான நிலைய அவசர கால நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்தி : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்தி : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ். நல்லூர் திருவிழாவிற்காக விசேட தொடருந்து சேவை - அமைச்சரின் அறிவிப்பு

யாழ். நல்லூர் திருவிழாவிற்காக விசேட தொடருந்து சேவை - அமைச்சரின் அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026