கஜகஸ்தான் சுரங்கத்தில் திடீர் தீ விபத்து! 32 பேர் பலி : 14 பேர் மாயம்(படங்கள்)
கஜகஸ்தானில் உள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 32 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்தெரிவித்துள்ளன.
குறித்த தீ விபத்தானது கோஸ்டென்கோ நிலக்கரி சுரங்கத்தில் நேற்று(29) இரவு இடம்பெற்றுள்ளது.
மீத்தேன் வாயு கசிவால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தீ விபத்து
மேலும் 252 பேர் பணி புரியும் குறித்த சுரங்கத்தில் 32 பேர் பலியாகியுள்ளதோடு , 14 பேர் காணாமல் போயுள்ளனர்.18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 பேர் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் சுரங்க நடவடிக்கைகளை தேசியமயமாக்கும் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்ட அதே நாளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது மரண சம்பவம்
கஜகஸ்தானில் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தால் இயக்கப்படும் தளத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த இரண்டாவது மரண சம்பவம் இதுவாகும்.
ஓகஸ்ட் மாதத்தில், கரகண்டா சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீ விபத்திற்கு கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
                                        
                                                                                                                         
    
                                 
    
    ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்
 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        