சிங்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வைத்துக்கொண்டு விடுதலைப்புலிகளுக்காக செயற்படும் தமிழ் எம்.பிக்கள் - அரசாங்கம் குற்றச்சாட்டு
சிங்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தமது பாதுகாப்புக்காக வைத்துக்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை போல எனக்கு தோன்றுகின்றது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளாகவும், பொலிஸ் அதிகாரிகளாகவும் தமிழர்கள் இலங்கையில் கடமையாற்றி வருகின்றனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழர்களை பாதுகாப்புக்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்வதில்லை.
அத்துடன், சிங்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அருகில் வைத்துக் கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும், புலம்பெயர் தமிழர்களுக்காகவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலை செய்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார். you may like this
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening