கீரிமலை பகுதி காணியை அளவிட ரகசியமாக வந்த அதிகாரிகள்! மக்களுடன் வாக்குவாதம்
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் சட்டவிரோதமாகவும் இரகசியமாகவும் முன்னெடுக்கப்படவிருந்த காணி அபகரிக்கு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கீரிமலை அதிபர் மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் முயற்சியில், அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று காலை வருகை தந்திருந்தனர்.
அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்
இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன் நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்தனர்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், மற்றும் சட்டத்தரணி சுகாஷ ஆகியோர் ஊர் மக்களுடன் இணைந்து காணி சுபீகாரிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து, திணைக்கள அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் மக்கள் ஈடுபட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் திரும்பி சென்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |