மறைந்த எம்.பியின் வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம்
கேகாலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக ரத்நாயக்க முதியான்செலாகே சமந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹப்பு ஆராச்சிகே கோசல நுவான் ஜெயவீரவின் மரணத்தைத் தொடர்ந்து, 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 62 இன் கீழ் ரத்நாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நியமனம்
அரசியலமைப்பின் பிரிவு 99(13)(b) மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 64(2) இன் படி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க வெளியிட்ட ஊடக அறிக்கையின் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் மறைவு
தேசிய மக்கள் சக்தி (NPP) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 06) தனது 38வது வயதில் காலமானார்.
இந்த நிலையில், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு இன்று (09) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

