டச்சு மண்ணை அதிர வைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்

IBC Tamil Sri Lanka Netherlands Reecha Baskaran Kandiah
By Independent Writer Aug 10, 2026 05:16 AM GMT
Report

நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம் : பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்

ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அகதிகளாக தடம் பதித்து, தமது கடின உழைப்பால் வெற்றி மீது வெற்றி குவித்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் பட்டியலில், பாஸ்கரன் கந்தையா என்ற பெயர் இன்றைக்கு உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்து நிற்கிறது என நெதர்லாந்தின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான 'Quote Net' அண்மையில் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்று, டச்சு மண்ணில் ஒரு ஈழத்தமிழர் உருவாக்கியுள்ள பிரமாண்டமான வணிகச் சாம்ராஜ்யத்தையும், தனது தாய்நிலம் மீதான காதலையும், நன்றியுணர்வையும் வெகுவாக பாராட்டியுள்ளது.

நெதர்லாந்து நாட்டின் ஆகப்பெரிய மில்லியனர்களை வரிசைப்படுத்தும் 'Quote 500' பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்து பெருமைப்படுத்தியிருக்கும் அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு பரபரப்பான நாவலைப் போலவும், திரைப்படக் காட்சிகளைப் போலவும் வர்ணித்துள்ளது.

செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியல்

அந்த டச்சு ஊடகத்தின் துல்லியமான நிதி மதிப்பீட்டின்படி, திரு. பாஸ்கரன் கந்தையாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பானது 165 மில்லியன் யூரோக்கள் ஆகும். அதாவது நமது இலங்கை ரூபாய் மதிப்பில் இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாயைத் தொடுகிறது (LKR 54.45 Billion).

இந்த பிரமாண்டமான நிதிப் பலம்தான் அவரை நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437வது இடத்தில் கம்பீரமாக அமர்த்தியிருக்கிறது எனவும், இந்த எண்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் அசாத்தியமான துணிச்சலும்தான் உண்மையிலேயே வியப்பளிக்கக்கூடியவை எனவும் அவர்கள் வியப்படைந்துள்ளனர்.

டச்சு மண்ணை அதிர வைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம் | Baskaran Kandiah In The Netherlands Quote 500 List

யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் ஒரு சாதாரன வறிய குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், தனது இளமைக் காலத்தில் இலங்கையில் நிலவிய போர் மேகங்களினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் ஐரோப்பாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார்.

நெதர்லாந்து மண்ணில் காலூன்றிய அவர், தன் முன்னாலுள்ள சவால்களைக் கண்டு அஞ்சாமல் தனது முப்பதாவது வயதில் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து 'லெபாரா மொபைல்' (Lebara Mobile) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

தாயகத்தையும், புலம்பெயர்ந்து வாழும் சொந்தங்களையும் குறைந்த செலவில் இணைக்கும் அவரது தொலைநோக்கு வர்த்தக உத்தி, ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது.

2017இல் அந்த நிறுவனத்தைச் சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்றதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் தமிழ் மில்லியனராக உயர்ந்தார்.

அதோடு லெபாராவோடு நின்றுவிடாது 2014இல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'IBC தமிழ்' ஊடகக் குழுமத்தைக் கொள்வனவு செய்து, அதனை ஈழத்தமிழர்களுக்கான எல்லை கடந்த ஒரே ஒரு பேரூடகமாக உருவாக்கி இன்றும் அதன் தலைவராகத் தனது பயணத்தை தொடர்கிறார்.

சூழலியல் சுற்றுலா மையம்

ஐரோப்பிய பொருளாதாரச் சூழலில் வெற்றிகரமான வியாபாரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டிய பிறகும், தான் பிறந்த தாய்நிலத்தின் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக போரினால் சிதைந்து கிடந்த தாயகப்பகுதிக்கு மீண்டும் பொருளாதார ரீதியாக உயிர் கொடுக்க வேண்டும் என்ற அவரது தணியாத ஆசையின் விளைவாக உருவானதுதான் றீச்ஷா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையம் ஆகும்.

பரந்து விரிந்த அந்த நிலப்பரப்பில் இயற்கை உரங்களைக் கொண்டு பராமரிக்கப்படும் கரிமப் பண்ணைகள், பலவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, பிரமாண்டமான நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க் என அனைவரையும் கவரும் வகையில் ஒரு சுற்றுலாச் சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார்.

டச்சு மண்ணை அதிர வைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம் | Baskaran Kandiah In The Netherlands Quote 500 List

அத்துடன் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நட்சத்திர விடுதிகள் அறைகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உணவகங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

"முப்பதாண்டு கால கொடூர போருக்குப் பிறகும் நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டு வளர்ச்சிப் பணிகள் எவையும் நடக்கவில்லை.

எனது சொந்த மண்ணுக்கும், என்னை உருவாக்கிய மக்களுக்கும் என்னால் முடிந்த மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த பிரமாண்ட திட்டத்தின் பின்னணியில் உள்ளது" என்று Quote இதழிடம் பாஸ்கரன் கந்தையா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் வட இலங்கையின் பொருளாதாரம் தேக்கமடைந்து கிடந்த சூழலில், றீச்ஷா மையத்தில் பாஸ்கரன் செய்த முதலீடு அந்தப்பகுதியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இன்றைக்கு அந்த மையத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதிநேர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயனடைகின்றன.

அதுமட்டுமன்றி, 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள், முச்சக்கரவண்டி மற்றும் வாகன சாரதிகள், உள்ளூர் கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அந்த இதழ் புகழாரம் சூடியுள்ளது.

டச்சு மண்ணை அதிர வைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம் | Baskaran Kandiah In The Netherlands Quote 500 List

ஈழத்தமிழர்களின் தேச நலன் தொடர்பிலான கருத்தாடல்களில் தேசிய முதலாளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சரியான முறையில் சமூகமயமாக்கப்படாமல், ஒரு தரப்பின் விமர்சனம் இருந்து வந்தாலும், தேவையுடைய ஒரு சமூகத்தின் பொருளாதார தேவையாக பாஸ்கரன் கந்தையா இருந்து வருகிறார்.

ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் ஒன்றில் புகழாரம் சூட்டப்படும் ஒரு ஈழத்தமிழரை எண்ணி நமது சமூகமும் பெருமையுறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி ஒரு முன்னுதாரனமாக தனது கனவுகளை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறார் பாஸ்கரன் கந்தையா.

ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் வசமாகும் சிறைச்சாலை பாதுகாப்பு! அரசாங்கத்தின் முக்கிய முடிவு

ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் வசமாகும் சிறைச்சாலை பாதுகாப்பு! அரசாங்கத்தின் முக்கிய முடிவு


பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி மக்கள் தொடர் போராட்டம்!

பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி மக்கள் தொடர் போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023