பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி மக்கள் தொடர் போராட்டம்!

Sri Lankan Tamils Jaffna SL Protest
By Theepan Aug 09, 2026 07:11 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு, பலாலி பகுதியில் தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேற அனுமதிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 8ஆவது வாரமாகவும் தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பலாலி சந்தியில் இன்று (09) நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது நீண்டகாலமாக தமது காணிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்களால் சொந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலை தொடர்வதாக மக்கள் தெரிவித்தனர்.

“எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும்”, “பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும்”, “மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் : நால்வர் அதிரடி கைது!

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் : நால்வர் அதிரடி கைது!

காணிகளை மீட்பதற்காக போராட்டம்

பல ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாத காரணத்தால், குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி மக்கள் தொடர் போராட்டம்! | Palali People Protest For Demanding Land Release

தமது காணிகளை விடுவிப்பதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதன் காரணமாகவே தமது காணிகளை மீட்பதற்காக தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கடல் அலையில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பலி

கடல் அலையில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பலி

அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறி, இயல்பான வாழ்க்கையை முன்னெடுப்பதே தங்களது பிரதான கோரிக்கை என தெரிவித்த மக்கள், எந்தவித வன்முறையுமின்றி அமைதியான முறையில் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி மக்கள் தொடர் போராட்டம்! | Palali People Protest For Demanding Land Release

எனவே, பலாலி மக்களின் பூர்வீக காணிகளை உரிய உரிமையாளர்களிடம் மீளக் கையளித்து, அவர்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று! ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தல்

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று! ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தல்



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026