பதவி விலகினார் கெஹலிய
Keheliya Rambukwella
Sri Lankan Peoples
By Dilakshan
தற்போது சிறையில் உள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதமொன்றின் மூலம் அதிபர் ரணில் விக்ரமசிங்கிற்கு தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதம் அதிபரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுற்றாடல் அமைச்சு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, புதிய சுற்றாடல் அமைச்சர் இன்னும் சில நாட்களில் பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல்
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தரமற்ற தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி